Rock Fort Times
Online News

திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர ஓட்டு வேட்டை…!

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கருப்பையா தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். அவர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் கிளிக்கூடு, பனையபுரம், உத்தமர்சீலி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின்போது வேட்பாளர் கருப்பையா பேசுகையில், திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில், 30 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய ரூ.3,000 கோடி வளர்ச்சித் திட்டங்களை 3 ஆண்டுகளில் செயல்படுத்தி தொகுதியை வளர்ச்சியடையச் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது வழியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உங்களுக்கு பணியாற்ற, திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறேன். இப்பகுதி மக்களுக்காக மக்களவையில் எனது குரல் ஒலிக்கும். எனவே, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.
பிரச்சாரத்தின்போது அமைப்புச் செயலாளர்கள் மனோகரன், ரத்தினவேல், வளர்மதி உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்