Rock Fort Times
Online News

தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா…* த.வெ.க.வில் ஐக்கியம்!

அதிமுக-வில் உட்கட்சி மோதல் வெடித்து வரும் சூழலில் வேலுமணிக்கு ஆதரவான 3 எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், வேலுமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார் மற்றும் மதுராந்தகம் மரகதம் குமரவேல் ஆகியோர் இன்று(மே 25) தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் நேரில் சந்தித்து அளித்தனர். அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். அதிமுகவில் நிலவும் மோதல் காரணமாக தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற காரணத்தால் இவர்கள் தங்களது எம்எல்ஏ க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் 3 பேரும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்