திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி முத்துலட்சுமி (33). இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்துள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இருட்டில் மர்ம நபரின் நடமாட்டம் தெரிந்துள்ளது. இதனைப்பார்த்து திடுக்கிட்டு எழுந்த முத்துலட்சுமி உறவினர்களை எழுப்பினார். பின்னர், விளக்கை போட்டு பார்த்த போது அந்த மர்ம நபர் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். அப்போது முத்துலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலிச்சங்கிலியில் பாதியைக் காணவில்லை. சங்கிலியை முழுவதுமாக திருட முயன்ற மர்ம நபர், அது முடியாமல் போகவே பாதியை நறுக்கி திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.