Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக புதிய நிர்வாகிகள்- பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளராக ராஜசேகரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக வெல்லமண்டி சண்முகம், இணை செயலாளர்களாக பெருமாள், என்.மனோகரன், சுரேஷ்குப்தா ஆகியோரும், மாவட்ட துணை செயலாளராக தில்லை சேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவராக எனர்ஜி அப்துல் ரகுமான், துணை செயலாளராக வி.எம்.பாலு, மாநகர மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக ரஜினிகாந்த், துணை செயலாளராக சதீஷ்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை தலைவர்களாக ரேணுகா சஞ்சய், துணை செயலாளராக சலாவுதீன், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக தென்னூர் அப்பாஸ், மாவட்ட இணை செயலாளராக இலியாஸ், துணை செயலாளராக ராஜு முகமது, மீனவர் பிரிவு மாவட்ட செயலாளராக கோகு. அம்பிகாபதி, மாநகர் மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளராக வெங்கடேசன், மாநகர் மாவட்ட இளைஞர்- இளம் பெண்கள் பாசறை செயலாளராக லோகநாதன், ஐடி பிரிவு மாவட்ட துணை தலைவராக மனோஜ், இணை செயலாளராக புத்தூர் ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர், வர்த்தக அணி மாவட்ட இணை செயலாளராக எல்பி.நாகராஜ், கே.நாகராஜ், துணைச் செயலாளராக பிரபாகரன், கலை பிரிவு மாவட்ட பொருளாளராக என்.சாதிக் அலி, காந்தி மார்க்கெட் பகுதி கழக செயலாளராக டி.ஏ.எஸ். கலிலுல் ரஹ்மான், காஜா பேட்டை பகுதி செயலாளராக வாசுதேவன், எம்ஜிஆர் இளைஞர் அணி ஜங்ஷன் பகுதி துணை செயலாளராக கருமண்டபம் ஆனந்தராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சார்பு அணிகளில் பகுதி வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்