Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனையில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு…!

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை முகாம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மனைவி துளசிதேவி (வயது 40). இவர்களுடைய மகள் பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அருகில் இருந்து துளசிதேவி கவனித்து வந்தார். துளசி தேவிக்கு ரத்த அழுத்த நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனை மகளிர் பிரிவு வார்டில் துளசி தேவி திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்