திருச்சி இ.பி ரோடு துணை மின் நிலையத்தில் நாளை (03.10.2024) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இ.பி ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்க்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணா புரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார் ரோடு, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், ஏ பி நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் கா.முத்துராமன் தெரிவித்துள்ளார்.
துவரங்குறிச்சி
இதேபோல திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (03.10.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசுக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரப்பட்டி, வெங்கட்நாயக்கன் பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுப்பட்டி, கல்லுப்பட்டி, ஏ.பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளக்காம்பட்டி,சிங்கிலிபட்டி, எம்.இடையப்பட்டி, பழைய பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அதவத்தூர்
அதவத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை போசம் பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் விஸ்தரிப்பு, குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்துபிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான்கோப்பு, கீரீக்கல் மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சோலை, வாசன்வேலி, சிவந்தநகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித் துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம் பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிக்கரும்பூர், புங்கனூர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என திருச்சி மன்னார்புரம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.