திருச்சியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலி: மின் ஊழியர்களின் அலட்சியப் போக்கே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி சிந்தாமணி பகுதி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய 12 வயது மகன் விரித்திவ் அஜய். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆண்டாள் வீதி பகுதியில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டிருந்த மின் ஒயர் மீது சிறுவன் உரசி விட்டதாக கூறப்படுகிறது. இதில், அந்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டான். உடனே, அருகில் இருந்தவர்கள் சிறுவனை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, அந்தப் பகுதியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் மின் ஒயர்கள் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. மின் ஊழியர்களின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம். இனிமேலாவது தொங்கிக் கொண்டிருக்கும் மின் ஒயர்களை உயர்த்தி கட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.