திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 59வது வார்டு கல்லுக்குழி, கள்ளர் தெரு, செங்குளம் காலனி, காஜா நகர், போக்குவரத்து அரசு கிளை அலுவலகம் போன்ற பல்வேறு இடங்களில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் , பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். குடிநீர் தொட்டி அமைத்து தருமாறும், பாதாள சாக்கடை வசதி, மழை காலங்களில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கூறினார். அவருடன் துணை மேயர் திவ்யா மற்றும் மண்டலம் 2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, மாநகராட்சி கவுன்சிலர் கீதா, வட்டச் செயலாளர் கணேசன் மற்றும் மூர்த்தி, கோவிந்தராஜ், மாநகராட்சி , அதிகாரிகள் மின்சாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.