போதைப் பொருளுக்கு எதிராக திருச்சி, காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி…!
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, திருச்சி, காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியின் மகளிர் பட்டாலியன், என்சிசி மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர். இதில் பள்ளி பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவிகளுடன் இணைந்து பங்கேற்றனர். உறுதிமொழியை இணை என்சிசி அதிகாரி எஸ். மதுமதி வாசித்தார் அதனை அனைவரும் திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும், அவர் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து, ஆரோக்கியமான வாழ்க்கை, சுய ஒழுக்கம் மற்றும் பொறுப்புள்ள குடிமக்களாக வாழும் உறுதியை அனைவரிடமும் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் போதைப்பொருட்களிலிருந்து விடுபட குடும்பங்களிலும், சமூகத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூதுவர்களாக செயல்படுவோம் என்றும் உறுதியளித்தனர்.

Comments are closed.