சென்னையில் இன்று(27-06-2026) மதிமுக பொதுக்குழுக்கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. அப்போது, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் 2017 முதல் 2019-ம் ஆண்டு வரை சுமார் 9 ஆண்டுகளாக திமுக உடனான மதிமுகவின் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. பொதுக்குழுக் கூட்டத்திற்கு பிறகு வைகோ அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “பொதுக்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவது என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். தமிழகத்தில் பாஜக ஊடுருவி விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக தான், கடந்த 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருந்தோம். எந்தவொரு இடத்தில் கூட, திமுக அரசை நாங்கள் விமர்சித்தது கிடையாது. முதலமைச்சராக இருந்த ஸ்டாலினை, உச்சியில் வைத்து நாங்கள் போற்றி வந்துள்ளோம்.
ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சில செய்திகளை நாங்கள் கேள்விப்பட்டோம். வடதுருவம், தென் துருவமாக இருந்த திமுகவும், அதிமுகவும் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க முயற்சி செய்வதாக வந்த செய்திதான் அது. அப்படியொரு முயற்சி நடந்திருந்தால், இதை விட பெரிய அரசியல் மோசடி எதுவும் இருக்க முடியாது. இதனால் திமுகவுடன் தோழமையை நீட்டிப்பது சாத்தியமற்றது என்ற நிலைபாட்டுக்கு வந்துள்ளோம். எங்கள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் (மல்லை சத்யா), எங்கள் மீது அபாண்டமான பொய்களையும், பழிகளையும் சுமத்தி வருகிறார். வருகிற இடைத்தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்தார்.

Comments are closed.