Rock Fort Times
Online News

திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக: பொதுக்குழுவில் பங்கேற்காத 2 எம்எல்ஏக்கள்…!

மதிமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று( ஜூன் 27) பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஆலோசனை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான தீர்மானமும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. 2017 முதல் சுமார் 9 ஆண்டுகள் திமுக கூட்டணியில் நீடித்து வந்த மதிமுக, தற்போது கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. இக்கூட்டத்தில் மதிமுகவின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளிவரும் நிலையில், இந்த கூட்டத்தில் இரு எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக 4 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், கடையநல்லூர், சீர்காழி ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்