Rock Fort Times
Online News

திருச்சி அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி….!

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் கொடியாலம் காந்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 41). சென்ட்ரிங் தொழிலாளியான இவர் காட்டூர் பாபாஜி நகரில் உள்ள தியாகராஜநகரில் கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். அவர், அந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்