திருச்சி மாவட்டம், முசிறியில் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு முசிறி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் “ராக்கிங்” தொடர்பாக இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மாணவர்கள் கைகளாலும், கட்டைகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் இரண்டு மாணவர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த மோதல் காரணமாக கல்லூரியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கல்லூரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.