திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு…!
திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இருதொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்ற அவர்
திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்தார். விரைவில் அத்தொகுதி உட்பட இன்னும் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ‘புலி’ திரைப்பட வருவாயை மறைத்ததாக, விஜய்மீது இருக்கும் வருமான வரி வழக்கை வேட்புமனுவில் மறைத்துள்ளார். மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதால், தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக கருதி, அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும். இந்த தேர்தல் வழக்கு முடியும் வரை அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விரைவில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு பட்டியலிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.