திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சில ரெயில்கள் பகுதியாகவும், சில ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு:-
*திருச்சியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி- காரைக்கால் டெமு ரெயில் (எண்:76820) நாளை( ஜூன் 17) முதல் வருகிற 23-ந்தேதி வரை (21-ந்தேதி தவிர) திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் காரைக்கால் செல்லாது.
* மறுமார்க்கத்தில் நாளை முதல் வருகிற 23-ந்தேதி வரை (21-ந்தேதி தவிர) காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட வேண்டிய காரைக்கால்- திருச்சி டெழு ரெயில் (எண்:76819) திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். அந்த நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படாது.
*திருச்சியில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் (எண்:56809) வருகிற 20-ந்தேதி மற்றும் 22-ந்தேதி கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
* திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ்(எண்:12664) திருச்சியில் இருந்து வருகிற 19-ந்தேதி மதியம் 1 மணிக்கு பதிலாக மதியம் 2.20 மணிக்கு புறப்படும்.
* திருச்சி- பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்:16843) வருகிற 23-ந்தேதி மதியம் 1 மணிக்கு பதிலாக 1.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
* நாளை முதல் வருகிற 23-ந்தேதி வரை (21-ந்தேதி தவிர) காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில்(எண்: 56832) காரைக்குடியில் இருந்து காலை 9.50 மணிக்கு பதிலாக காலை 10.15 மணிக்கு திருச்சிக்கு புறப்படும்.
* அதுபோல் திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 15 முதல் 55 நிமிடம் வரை தகுந்த இடங்களில் நின்று காலதாமதமாக செல்லும். குறிப்பாக சென்னை-குருவாயூர் ரெயில் (எண்:16128)18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 25 நிமிடமும், 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 15 நிமிடமும் பயண நேரத்தில் தாமதம் ஏற்படும்.
* தூத்துக்குடியில் இருந்து நாளை காலை 7.40 மணிக்கு புறப்படும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் (எண்:17616) பயண நேரத்தில் 55 நிமிடம் தாமதம் ஏற்படும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
*

Comments are closed.