முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொகுப்புகளை தயாரித்து வெளியிடுதல், டிவிட்டர் தொடங்குதல், 100 இளைஞர்களுக்கு வலைதள வசதியுடன் கூடிய கைப்பேசி வழங்கும் நிகழ்ச்சி தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் கருணாநிதி தலைமையில் திருச்சியில் இன்று(09-07-2024) நடந்தது .மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் குட்டிமணி, தமிழரசன் ஆகியோர் வரவேற்றனர். விழாவில், கல்வி அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் திண்டுக்கல் லியோனி, திருச்சி மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி திருச்சி மண்டல பொறுப்பாளர் கேசவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் மகாதேவன், முரளி கிருஷ்ணன், உமாராணி ஆகியோர் நன்றி கூறினர்.
Comments are closed.