Rock Fort Times
Online News

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நிர்வாக இயக்குனர், பொது மேலாளர் காலி பணியிடங்களை நிரப்பிட கோரிக்கை…!

பொதுமக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசு போக்குவரத்து கழகம் முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாண் இயக்குனர் என்று சொல்லக்கூடிய நிர்வாக இயக்குனர் காலி பணி இடங்கள் கடந்த சில மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது, குறிப்பாக திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், சென்னை தலைமைச் செயலகம், கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் நிர்வாக இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல, அந்தந்த மண்டலத்தில் பொது மேலாளர் பணியிடங்கள் குறிப்பாக கரூர், கடலூர், சென்னை மாநகர போக்குவரத்து கழகம், புதுக்கோட்டை, மதுரை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மண்டலத்தில் பொது மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆகவே, பொதுமக்களின் தேவை அறிந்து போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட தமிழக முதலமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்