திருச்சி மாவட்ட கால்பந்து சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. சங்க தலைவர் வீர சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில், கடந்த ஆண்டு பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற திருச்சி மாவட்ட கால்பந்து சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தின் அறிக்கைகள் உறுதிப்படுத் தப்பட்டது. மேலும், சங்கத்தின் கணக்குகளை தணிக்கை செய்ய 2024-2025 -ம் ஆண்டிற்கான ஆடிட்டர் மற்றும் சட்ட ஆலோசகர் நியமனம் செய்யப்பட்டனர். கடந்த வருடாந்திர வரவு-செலவு திட்ட மதிப்பீட்டை கருத்தில் கொண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் துணைத் தலைவர்கள் உக்கிரமாகாளி, ஷாகின்ஷா, பொருளாளர் மணிமாறன், உதவி செயலாளர்கள் ராஜாமணிகண்டன், பால்ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ஜெய்சங்கர், பாண்டியன், முருகன், இலியாஸ் ஷெரீப், மணிமாறன், ராஜேஷ், ஹரிஹர சுதன், ஜான் நிக்கோல்தாஸ், சுனிஜ் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.