தவெக தலைமையிலான அரசின் அமைச்சரவை இன்று( மே 21) விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தவெக வெற்றி பெறாத 8 மாவட்டங்கள் உள்பட 19 மாவட்டங்களில் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறவில்லை. இதனால் இந்த மாவட்டங்களில் யாருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸை சேர்ந்த ராஜேஷ்குமாருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக வெற்றி பெற்றும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத 12 மாவட்டங்கள் விவரம் வருமாறு:-
* திருநெல்வேலி
* தேனி
* திண்டுக்கல்
* கரூர்
* திருவண்ணாமலை
* கள்ளக்குறிச்சி
* திருவள்ளூர்
* வேலூர்
* தருமபுரி
* கிருஷ்ணகிரி
*திருப்பத்தூர்
* பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ.க்களில் ஒருவருக்குக் கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

Comments are closed.