Rock Fort Times
Online News

திருத்தம் செய்யப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை கைவிடக் கோரி திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…!

மத்திய அரசு திருத்தம் செய்து கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை கைவிடக் கோரியும் மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திருச்சி மற்றும் புதுச்சேரி சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் ஏற்கனவே ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டனர். இன்று(03-07-2024) மத்திய அரசு அலுவலகமான பி.எஸ். என்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஜாக் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் சுகுமார், துணைத்தலைவர் மதியழகன், இணைச் செயலாளர்கள் சந்தோஷ்குமார், அப்துல்கலாம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன், முத்துமாரி, தினேஷ், சரவணன், மூத்த வக்கீல்கள் மார்ட்டின், வீரமணி, முத்துகிருஷ்ணன், ஓம் பிரகாஷ், முன்னாள் செயலாளர் வடிவேல்சாமி, குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பி.வி.வெங்கட், துணைத் தலைவர்கள் சசிகுமார், பிரபு, செயற்குழு உறுப்பினர் பொன் முருகேசன், வழக்கறிஞர் விக்னேஷ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
வருகிற 8-ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி திருச்சியில் நடக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்