Rock Fort Times
Online News

கோவை மாநகராட்சி மேயரை தொடர்ந்து நெல்லை மேயரும் ராஜினாமா…!

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை இன்று(03-07-2024) திடீரென ராஜினாமா செய்தார்.  இந்த பரபரப்பு அடங்குவதற்குள்  நெல்லை  மாநகராட்சியின் மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேயராக சரவணன் பதவியேற்றதிலிருந்து அவருக்கு எதிராக  திமுகவின் உறுப்பினர்களே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்திருந்தனர். மேலும், தொடர்ச்சியாக சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே செயல்பட்டு வந்த நிலையில்  சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  இரு மாநகராட்சி மேயர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்