திருச்சி பீமநகர் பகுதியில் மழை நீரோடு சாக்கடை நீர் கலக்கும் அவலம்- மேயரிடம் எஸ்டிபிஐ கட்சி முறையீடு…!
திருச்சி மாநகராட்சி 51 மற்றும் 52 வது வார்டுக்கு உட்பட்ட பீம நகர், கூனி பஜார் போன்ற பகுதிகளில் லேசான மழைக்கே மழை நீரோடு சாக்கடை நீரும் சேர்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி செயலாளர் முஸ்தபா தலைமையில் நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனை சந்தித்து முறையிட்டதோடு மனுவும் அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மேயர், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது கட்சியின் மேற்கு தொகுதி தலைவர் சிராஜ், மாவட்ட செய்தி தொடர்பாளர் டாக்டர் பக்ருதீன், மேற்கு தொகுதி பொருளாளர்
பத்ரு ஜமான், கிளைச் செயலாளர்கள் பஷீர், ஷாஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.