Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த விமானத்தால் பரபரப்பு…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து தினமும் ஏராளமான பயணிகள் விமானம் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (26-06-2024) திருச்சி விமான நிலையத்தில் விமானம் ஒன்று நீண்ட நேரம் வானில் வட்டமடித்தபடி பறந்து கொண்டே இருந்தது. இதனைப் பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள், அப்பகுதி மக்கள் எந்திர கோளாறு காரணமாக விமானம் தரையிறங்க முடியவில்லையா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று வியப்புடன் பார்த்த வண்ணம் இருந்தனர். இதனை சிலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த விமானம் தரை இறங்கியது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, திருச்சி விமான நிலையத்தில் மாதம் தோறும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் பயிற்சி விமானம் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இன்று காலை பயிற்சி விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்து காலை 7 மணி முதல் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், இது வழக்கமான ஒன்றுதான் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்தனர். விமானம் ஒன்று நீண்ட நேரம் வானில் வட்டமடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்