Rock Fort Times
Online News

மண்ணச்சநல்லூர் பேரூராட்சி அதிகாரிகளை கண்டித்து கடைகளை அடைத்து வணிகர்கள் பேரணி …!

சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் “கேரி பேக்” உற்பத்தி செய்வதற்கும், அதனை விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக “மஞ்சள் பை திட்டம்” கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் கேரி பேக் பயன்படுத்துவதை வணிகர்கள் தடை செய்து விட்டனர். அதற்கு பதிலாக துணிப்பை விநியோகித்து வருகின்றனர். இந்தநிலையில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி அதிகாரிகள் மதிய வேளையில் பெரிய நிறுவனங்களில் புகுந்து கேரி பேக் உள்ளனவா? என அடாவடித்தனமாக சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வணிக சங்கத்தின் பொறுப்பாளர் ராஜேந்திரன் என்பவர் கூறுகையில், மண்ணச்சநல்லூரில் கேரி பேக் பயன்பாடு கிடையாது.  வாடிக்கையாளர்களுக்கு துணிப்பை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மண்ணச்சநல்லூர் பேரூராட்சி அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் திடீரென புகுந்து கேரி பேக் பயன்பாடு உள்ளதா? என்று ஆய்வு நடத்துகின்றனர். மதிய வேளையில் கடை உரிமையாளர்கள் இருக்க மாட்டார்கள். பணியாட்கள் மட்டுமே இருப்பார்கள். அந்த நேரத்தில் பேரூராட்சி அதிகாரிகள் அத்துமீறி உள்ளே நுழைந்து அடாவடித்தனமாக சோதனையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. அதிகாரிகளின் இந்த செயலை கண்டித்து இன்று(26-06-2024) வணிகர்கள் தங்களது கடைகளை ஒரு நாள் அடைத்து பேரணி நடத்தி உள்ளோம் என்றார். அதன்படி, மண்ணச்சநல்லூர் காந்தி சிலையில் இருந்து பேரூராட்சி வரை கண்டன பேரணி நடைபெற்றது. பேரணியில் , வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் மண்ணச்சநல்லூரில் உள்ள வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

🔴ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் திருநாள் (டோலோத்சவம்) || 3ம் நாள் || சிறப்பு தொகுப்பு ||

1 of 901

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்