Rock Fort Times
Online News

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் வாகனம் நிறுத்தும் இடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா…!

திருச்சி நீதிமன்றத்திற்கு வழக்குகள் சம்பந்தமாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். வழக்கறிஞர்களும் அதிகளவு வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் வழக்கறிஞர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு நீதிமன்ற வளாகத்தில் தனி இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி பங்கேற்று, அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் மதியழகன், செயலாளர் சுகுமார், இணை செயலாளர் சலாம் சந்தோஷ், செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன், முத்து, மாரி, சரவணன் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் ஆகியோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்