திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ப. கருப்பையா, மாட்டு வண்டியில் சென்று ஓட்டு வேட்டையாடினார். திருச்சி கருமண்டபம் பகுதியில் அமைந்துள்ள இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கிய அவர் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட கருமண்டபம், பொன்னகர், மிளகுபாறை, திருநகர், ஆர்எம்எஸ் காலனி, பிராட்டியூர், ராம்ஜி நகர், கண்டோன்மென்ட், பறவைகள் சாலை, ஸ்டேட் வங்கி காலனி, வில்லயம்ஸ் சாலை, மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம், காஜாமலை, லூர்துசாமிபிள்ளை காலனி, இ.பி.காலனி, சுந்தர்நகர், ரங்காநகர், சிம்கோ மீட்டர் காலனி, கிராப்பட்டி, உடையான் பட்டி, விமான நிலையம், காமராஜர், வயர்லெஸ் சாலை, சுப்பிரமணியபுரம், கேகே நகர் உள்ளிட்ட 133 இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின்போது பல்வேறு இடங்களில் மாட்டு வண்டியில் சென்று ஓட்டு வேட்டையாடினார். அப்போது அதிமுக வேட்பாளரை ஆதரித்து புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் பேசும்போது, மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காகவே பணியாற்றக்கூடிய இயக்கம் அதிமுக. கடந்த 3 ஆண்டு காலத்தில் மக்களுக்கு எதுவும் செய்யாமல் மக்களுக்கு விரோதமாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் திருச்சி, புதுக்கோட்டை பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினோம். இளைஞரான கருப்பையாவை எம்.பியாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்து, திருச்சிக்கு தேவையான அனைத்து முன்னோடி திட்டங்களையும் கொண்டு வருவார். மாவட்டத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி செயல்படுவார். மக்களுக்காக உழைக்க காத்திருக்கும் கருப்பையாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.
பிரசாரத்தின்போது, அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ. சீனிவாசன், அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி, ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன், கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, கருமண்டபம் பத்மநாதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா,மாவட்ட அணி செயலாளர்கள் ஞானசேகர், ஜோசப் ஜெரால்டு, பாலாஜி மற்றும் வர்த்தகர் அணி டிபன் கடை கார்த்திகேயன், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி, வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, பகுதி கழக செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, என்.எஸ்.பூபதி கலைவாணன் மற்றும் மகளிர் அணியினர், தேமுதிக, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று ஆதரவு திரட்டினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.