திமுக கூட்டணியில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திருச்சி மாநகர பகுதிகளில்
திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு பிரச்சாரம் மேற்கொண்டனர். திருச்சி மேலப்புதூர், கூனிபஜார், கொத்தமங்கலம், எடமலைப்பட்டிபுதூர், பிராட்டியூர், பஞ்சப்பூர், கே.கே.நகர், எல்ஐசி காலனி, மங்கம்மா நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், காஜாமலை, உறையூர், லிங்கநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக்கூறி வாக்குகள் சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. அதனை எல்லாம் மீறி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதெல்லாம் மத்தியஅரசு எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது. ஆனால், நமது முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் மழை வெள்ளத்தில் நின்று மக்கள் பணியாற்றினர். ஆகவே தேசிய அளவில் நமக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை தமிழகம் பெற வேண்டுமெனில் ஆட்சி மாற்றம் அவசியம். பாஜகவை அகற்றி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அந்த வகையில் திருச்சியில் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
பிரச்சாரத்தின் போது திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, பகுதி செயலாளர் மோகன்தாஸ்,
மாநில பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, கவுன்சிலர்கள் கவிதா செல்வம், கலைச்செல்வி, ராமதாஸ், புஷ்பராஜ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் மு.பூமிநாதன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ரொஹையா, மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் ரமேஷ் மற்றும் திமுக, மதிமுக, இந்தியா கூட்டணியின் தோழமை கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.