திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு சாலப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (57). இவர் திருவெள்ளறை கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மின் மோட்டாரை பழுது பார்ப்பதற்காக இறங்கினார். அப்போது அவரது காலில் மின் ஒயர் சிக்கியுள்ளது.
இதில் நிலை தடுமாறிய பாலசுப்பிரமணியன் சுமார் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் வீரர்கள் சதீஷ்குமார், பிரான்சிஸ் அலெக்சாண்டர், பெரியசாமி, தர்மராஜா, வெங்கடேஷ், விக்னேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி சுமார் ஒரு மணி நேரம் போராடி பாலசுப்ரமணியனை மீட்டனர். ஆனால், அவரை சடலமாக தான் மீட்க முடிந்தது. மண்ணச்சநல்லூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.