3 சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரியும் திருச்சி கோர்ட்டு நுழைவு வாயிலில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம், ஜாக் அமைப்பு ஆகியவை இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. ஜாக் அமைப்பின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். திருச்சி வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சுகுமார், துணைத்தலைவர் மதியழகன், இணைச் செயலாளர்கள் அப்துல் கலாம், சந்தோஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன், சரவணன், முத்துமாரி, குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை பி.சுரேஷ், செயலாளர் பி.வி. வெங்கட், வரகனேரி சசிகுமார், வழக்கறிஞர்கள் ஆதிநாராயணன், தாஜுதீன், தியாகராஜன், ராஜன், ராமச்சந்திரன், ராஜேந்திரன், சந்துரு, ரேவதி, ஜீவா, புவனேஸ்வரன், ஜெயராமன், உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments are closed.