திருச்சி மணிகண்டம் தீரன் நகரை சேர்ந்தவர் கரந்தமலைமாறன். இவரது மகன் அகிலன் (வயது 20) . இவர் திருச்சியில் உள்ள ஒரு இனஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இரவு அகிலன் மற்றும் அவரது நண்பர் மதன் பிரசாத் (வயது 19) மோட்டார் சைக்கிளில் திருச்சி மன்னார்புரத்தில் இருந்து பி.என்.டி.காலனி அருகில் வந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது தனது மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த ஹெல்மெட்டை எடுக்க அகிலன் நடுரோட்டில் வண்டியை நிறுத்தியுள்ளாா். அப்பொழுது அந்தப் பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த போக்குவரத்து காவலா் ஸ்ரீதர் (வயது 45)என்பவர் சாலையில் விழுந்த ஹெல்மெட்டை எடுத்து கொடுத்துள்ளார். அப்போது மன்னார்புரத்தில் இருந்து வந்த ஒரு கார் வேகமாக அகிலன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் காவலா் ஸ்ரீதர் தலையில் பலத்த காயமடைந்தார். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த அகிலன், மதன் பிரசாத் ஆகியோரும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் போக்குவரத்து காவலா் ஸ்ரீதர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.