தமிழ்நாடு யாதவ மகா சபை திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கினார் . மாநில செயலாளர் ஸ்ரீதர் வரவேற்புரையாற்றினார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.மாயழகு, திருவரங்கம் கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவா் இன்ஜினியர் வெங்கடாசலம், தொழிலதிபர் ஜெயகர்ணா, நிர்வாகிகள் ஸ்ரீதர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்தில் மாநில தலைவர் நாசே. ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் பேசுகையில் :
யாதவ சமுதாய மக்களின் வாழ்வாதாரம் பெருக்கிடவும் , சமுதாய மாணவ மாணவியருக்கு கல்வி தகுதி அடிப்படையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் நிர்வாகிகள் பாடுபட வேண்டும். வரும் காலங்களில் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி ஆண்ட கட்சியாக இருந்தாலும் சரி நமது சமுதாய மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒருவரே தமிழகத்தை ஆள முடியும் என்கிற கொள்கையை ஏற்படுத்திட வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில மாநாடு ஒரு திருப்புமுனையாக அமையும் என அவர் கூறினார்,மேலும் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மனோகரன், மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் பொட்டல் துரை, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் முத்தையா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் இக்கூட்டத்தில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் வரலாற்றை அரசு பாட புத்தகங்களில் சேர்க்க வேண்டும். யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் , ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாசார அடிப்படையில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும், கால்நடை வளர்ப்பு நல வாரியம் அமைக்க வேண்டும், நலவாரியத்தின் தலைவராக யாதவ சமூகத்தினர் நியமிக்க வேண்டும், யாதவ சமுதாய மக்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளிலும் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்டத் தலைவர் தங்கராஜ் நன்றி கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.