Rock Fort Times
Online News

திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்க கொடிமரம் பிரதிஷ்டை…!

திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் இன்று (16-02-2025) ஞாயிற்றுக்கிழமை காலை சாமி சன்னதியின் எதிரே புதிதாக செய்யப்பட்ட தங்கக் கொடி மரத்திற்கும், மேற்கு திசை நோக்கி உள்ள அஷ்டத்திக்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக இந்த கொடி மரங்களுக்கு நேற்று சனிக்கிழமை காலை சாமி சன்னதி அருகில் உள்ள நடராஜர் சன்னதி வாயிலில் யாக பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இன்று காலை யாக பூஜைகள் முடிந்து கடங்கள் புறப்பட்டு தங்கக் கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 31 அடி உயரம் கொண்ட தங்கக் கொடி மரமும், 13 அடி உயரம் அஷ்டத்திக்கு கொடி மரமும் எட்டு திசையில் உள்ள கொடி மரம் முழுவதும் காப்பர் தகடுகளால் உருவாக்கப்பட்டது. சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான இந்த அனைத்து கொடி மரங்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்தினர் உபயமாக வழங்கினர். இதனை மதுரையைச் சேர்ந்த ஸ்தபதி செல்வராஜ் வடிவமைத்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்