அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 89). இவர் கடந்த 2022 ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் நலம் திடீரென பாதிக்கப்படவே, பிப்ரவரி 12 ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குப்புசாமி உயிரிழந்தார். இதுகுறித்து சிறை அதிகாரி அளித்த புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.