ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் அதிவிரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில், மதுரை கோட்டத்தில் செய்துங்கநல்லூர்- ஸ்ரீவைகுண்டம் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் அதிவிரைவு ரயிலானது (20605) ஜனவரி 1 முதல் 5 ஆம் தேதி வரை திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, திருச்செந்தூர்- சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயிலானது (20606) ஜனவரி 1 முதல் 5 ஆம் தேதி வரை திருச்செந்தூர் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருநெல்வேலியிலிருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.