மாயமான வாலிபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள்…!
திருச்சி, திருவெறும்பூர் காட்டூர் பகுதியைச்சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பிரதீவிராஜன் (வயது 29). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஊட்டி குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவருக்கு நிறைய கடன் இருந்ததாகவும், இதற்காக மனைவி நகைகளை வாங்கி அடமானம் வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த 06-11-2023 ம் தேதி திருச்சி வந்த இவர், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாயமாகி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர். காணாமல் போன அன்றைய தினம் இவர் பிரவுன் கருப்பு நிற முழுக்கை கட்டம் போட்ட சட்டை, ,ப்ளூ ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருந்தார். மாநிறம் கொண்ட இவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர். இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல் ஆய்வாளர், கோட்டை காவல் நிலையம், திருச்சி மாநகரம் என்ற முகவரியிலோ அல்லது 94981 82020 மற்றும் 9498100628 என்ற செல்போன் எண்களிலோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.