மறு நியமன போட்டித் தேர்வை முற்றிலும் நீக்கிட வேண்டும், திமுக தேர்தல் அறிக்கை 177 -ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் 11 ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று(24-09-2024) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வடிவேல் சுந்தர் முன்னிலை வகித்தார். இந்தப் போராட்டத்தில் மாநில பொருளாளர் ஹரிஹரசுதன், மாநில செயலாளர் முருகன், மாநில ஆலோசகர் அன்பரசு, மாநில துணை அமைப்பாளர் தினேஷ் பாபு, மத்திய மண்டல பொறுப்பாளர் பிரபாகரன், மாநில நிர்வாகிகள் ரோகிணி வடிவேல், அன்புமணி உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் சண்முகப்பிரியா நன்றி கூறினார்.
Comments are closed.