Rock Fort Times
Online News

வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் திருட்டு- வீட்டிலிருந்த உணவையும் “ருசி” பார்த்த கொள்ளையர்கள்…!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அகிலாண்டபுரம் மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் இளஞ்செழியன் (55). இவர் , டிராக்டர்களை பழுது நீக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுகுணா. இந்த தம்பதியினருக்கு விவேக், விக்னேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில் நேற்று இரவு சுகுணா கீழ் வீட்டிலும், இளஞ்செழியன் மற்றும் அவரது இரு மகன்களும் மாடியிலும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.  இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த  30 பவுன் நகைகள் ,20,000 ரொக்கம் மற்றும் உண்டியல்கள் என அனைத்தையும் திருடிவிட்டு வீட்டின் சமையல் அறையில் இருந்த உணவுகளை எடுத்துக்கொண்டு வீட்டின் அருகிலேயே அமர்ந்து நிதானமாக சாப்பிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.காலையில் வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளஞ்செழியன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் மற்றும் ரொக்கம் திருட்டுப் போய் இருந்தது கண்டு திடுக்கிட்டார்.  இதுகுறித்து சமயபுரம் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தார்.  அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  கைரேகை நிபுணர்கள், மர்ம நபர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர்.  மோப்பநாய் உதவியுடன் துப்பு
துலக்கப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.  இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்