தென்னக ரயில்வே அறிவிப்பு தென்னக ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருச்சிராப்பள்ளி மாவட்டம் உத்தமர்கோவில் ரயில் நிறுத்தத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக உத்தமர்கோவில் ரயில் நிறுத்தத்தில் நின்று செல்லும் ரயில் எண் : 06890 திருச்சிராப்பள்ளி – திருப்பாதிரிப்புலியூர் , டெமு ரயில், எண் 06892 திருச்சிராப்பள்ளி – விருத்தாசலம் டெமு சிறப்பு ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் இன்று (29.04.2024) முதல் 01.05.2024 வரை 3 நாட்கள் உத்தமர்கோவில் ரயில் நிறுத்தத்தில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.