Rock Fort Times
Online News

முள் புதருக்கு தீ வைத்த மர்ம நபரால் பரபரப்பு !

நொச்சியம் பகுதியில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் உள்ள அத்தாணி பேருந்து நிறுத்தம் அருகே பர்னிச்சர் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பர்னிச்சர் கடை பின்புறம் ஒரு ஏக்கர் பரப்பளவில் முள்புதர் இருந்துள்ளது. அவ்வழியாக சென்ற மர்ம நபர் முள் புதருக்கு தீ வைத்துள்ளார் .தீ மல மலவென்று பரவி முள் புதர் முற்றிலும் எரிந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் புகை மூட்டமாக காட்சியளித்தது. அவ்வழியாக சென்றவர்கள் சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் தீயணைப்பு அலுவலர் முத்துக்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் SJDT பேர் கொண்ட பர்னிச்சர் கடையில் உள்ள 10 லட்சம் மதிப்புள்ள மரங்கள் கட்டைகள் அதிர்ஷ்டவசமாக தீயில் தப்பியது. இந்த தீ விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் முள் புதருக்கு தீ வைத்த மர்ம நபரை வலை வீசி தேடி வருகிறார்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்