Rock Fort Times
Online News

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்…!

தமிழகம் முழுவதும்  ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-  சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பி சக்தி கணேசன் சென்னை பெருநகர உளவுத்துறை துணை ஆணையராகவும், மதுரை தென் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்பி சுஜித்குமார் பெருநகர சென்னை காவல்துறையின் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி பள்ளியின் எஸ்பி எஸ்.செல்வநாகரத்தினம் திருவல்லிக்கேணி துணை ஆணையராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நிஷா, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் கடலோர காவல் படையின் எஸ்பி டி.என்.ஹரிகிரண் பிரசாத் மயிலாப்பூர் துணை ஆணையராகவும், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கே.கார்த்திகேயன், கோவை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி கிழக்கு சரக துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா, பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாகவும், சென்னை பயங்கரவாத தடுப்புப்பிரிவு எஸ்பி புக்யா சினேகா பிரியா, சென்னை அண்ணா நகர் துணை ஆணையராகவும் நியமிக்ப்பட்டுள்ளனர்.  சென்னை பூக்கடை சரக துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா, திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாகவும், பள்ளிக்கரணை சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் கவுதம் கோயல் சேலம் மாவட்ட எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன், நாகை மாவட்ட எஸ்பியாகவும், விருதுநகர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான், கரூர் மாவட்ட எஸ்பியாகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.  எஸ்பி பி.சுந்தரவடிவேல், சென்னை பூக்கடை சரக துணை ஆணையராகவும், சென்னை காவல் தலைமையகத்தின் உதவி ஐஜி டி.கண்ணன், விருதுநகர் மாவட்ட எஸ்பியாகவும், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.சுப்புலட்சுமி, கோயம்பேடு சரக துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியாகவும், கரூர் மாவட்ட எஸ்பி கே.பிரபாகர், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னைப் பெருநகர பாதுகாப்பு துணை ஆணையர் எஸ்.எஸ்.மகேஷ்வரன், தருமபுரி மாவட்ட எஸ்பியாகவும், சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் பி.ஆர்.ஸ்ரீநிவாசன், தென்காசி மாவட்ட எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  சேலம் தெற்கு துணை ஆணையர் என்.மதிவாணன், வேலூர் மாவட்ட எஸ்பியாகவும், தமிழ்நாடு பால் கூட்டுறவு கழக ஊழல் கண்காணிப்பு எஸ்பி மேகலினா இடென், சென்னை காவல்துறை தலைமையகத்துக்கும், சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் வி.வி.கீதாஞ்சலி, சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராகவும், பெருநகர சென்னை காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறையின் துணை ஆணையர் டி.ரமேஷ்பாபு, சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்