திருச்சி ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் திடீரென உயிரிழப்பு…! ( உருக்கமான வீடியோ இணைப்பு)
திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். சிறந்த கல்வி மட்டுமின்றி ஒழுக்கம், நேரம் தவறாமை, விளையாட்டு போன்றவற்றிலும் இப்பள்ளி சிறந்து விளங்குகிறது. இந்நிலையில் இன்று(08-08-2024) மாலை 2ம் வகுப்பு படிக்கும் ஒரு கிளாஸ் மாணவ- மாணவிகளுக்கு ஸ்போர்ட்ஸ் பீரியட் ஆகும். அப்போது மாணவர்கள் வகுப்பறையில் தங்களுக்குள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாணவன் திடீரென மயங்கி விழுந்தான். சக மாணவர்கள் அந்த மாணவனை தூக்க முயன்றபோது மூச்சு, பேச்சின்றி கிடந்தான். இதுகுறித்த தகவலின்பேரில் பள்ளி நிர்வாகத்தினர் வகுப்பறைக்கு விரைந்து வந்து மாணவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பதறி அடித்துக் கொண்டு பள்ளிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.அந்த மாணவருக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்ததாகவும், அதன் காரணமாக மாணவன் உயிரிழந்ததாகவும், மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறப்படுகிறது. பள்ளிக்குச் சென்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.