வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்- நாளை முன்பதிவு தொடங்குகிறது…!
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா தேவாலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மாதாவை பிரார்த்தித்து செல்கின்றனர். வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்ல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்தும், கோவாவில் இருந்து வாஸ்கோடகாமா ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா இம்மாதம் இறுதியில் தொடங்குகிறது. திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பாந்திரா ரயில் நிலையத்தில் ( எண் 09093 ) 27ம் தேதி இரவு 9-55 மணிக்கு புறப்படும் ரயில் புனே, ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை சென்றடைகிறது. இதேபோல வேளாங்கண்ணியில் ( எண் 09094) இருந்து ஆகஸ்ட் மாதம் 29ம் தேதியும், செப்டம்பர் மாதம் 9 தேதியும் ரயில் இயக்கப்படுகிறது. 29-ம் தேதி மதியம் 1-55 மணி அளவில் வேளாங்கண்ணியில் இருந்து ரயில் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி ஒரு பெட்டியும், மூன்றாம் வகுப்பு ஏசி 10 பெட்டிகளும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி 7-ம், முன்பதிவு செய்யப்படாத பெட்டி இரண்டும் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை(09-08-2024) காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.