கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.67 லட்சத்தை சுருட்டிய கும்பல்…!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த 46 வயது நபர் ஒருவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஒரு இணையதள முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. அதில், நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப கிரிப்டோ கரன்சிகள் வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் இதன் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு பணம் தேவைப்படும்போது அதை விற்றால் லாபத்துடன் உங்கள் முதலீட்டு தொகை உங்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி அந்த இணையதளம் மூலம் தன் விவரங்களை பதிவு செய்த அவர், முதலில் சிறிதளவு முதலீடு செய்த தொகைக்கு பெரியளவில் லாபம் கிடைத்தது. இதையடுத்து அவர் தன்னிடமிருந்த 66 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாயை அனுப்பினார். ஆனால், அதன்பின் அந்த இணையதள பக்கம் முடங்கியது. இதனால், சந்தேகம் அடைந்த அவர் தன்னை தொடர்பு கொண்ட வாட்ஸ் அப் எண்களை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed.