Rock Fort Times
Online News

மாப்பிள்ளையின் போதை பழக்கத்தை அறிந்து திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்….

பெண்ணின் தாயை தாக்கிய பிரியாணி மாஸ்டர் கைது...

திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் யாசின். இவரது மனைவி அசினாபேகம் (வயது 42).இவர் அந்தப் பகுதியில் சேலை மற்றும் நைட்டி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அம்ஜத் அலி (23). பிரியாணி மாஸ்டர். இவருக்கும், அசீனா பேகத்தின் மகளுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிகிறது. அம்ஜத் அலிக்கு போதைப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நாள் போதையில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அசினாபேகம்  அவரை கண்டித்தார். பின்னர், அவருக்கு மகளை திருமணம் செய்து வைக்கும் முடிவை கைவிட்டார். மேலும் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தார்.

அதேபோல அஜ்மத் அலியின் பெற்றோரும் மகனுக்கு அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க பெண் பார்த்துள்ளனர். அப்போது அஜ்மத்தின் போதைப் பழக்கம் அறிந்து அவர்களும் மறுத்து விட்டனர். இதனால் அஜ்மத்துக்கு, அசினா பேகம் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்தான் அண்ணா நகரில் உள்ள பெண் வீட்டாரிடமும் தன்னைப் பற்றி தெரிவித்து இருக்கலாம் என நினைத்து போதையில் மீண்டும் அசினா பேகத்தின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்ததோடு அசினா பேகத்தை கையால் தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து அசினாபேகம் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அஜ்மத் அலியை கைது செய்து  சிறையில்  அடைத்தனர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்