Rock Fort Times
Online News

முதல்வர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினர் கூண்டோடு நீக்கம்… திருச்சி மாவட்ட செயலாளர்கள் 3 பேரின் பதவிகளும் பறிப்பு..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று(13-05-2026) தமிழக வெற்றிக்கழக ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அதிமுகவை சேர்ந்த 26 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் விஜய் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்தநிலையில் முதல்வர் விஜய்க்கு ஆதரவளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோருக்கு ஆதரவாக உள்ளவர்களின் கட்சிப் பொறுப்புகளை பறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, அ.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நத்தம் விஸ்வநாதன், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்.பி. வேலுமணி ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் உள்ள சி.வி.சண்முகம், காமராஜ், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின், உடுமலை ராதாகிருஷ்ணன், ஜக்கையன், இசக்கி சுப்பையா ஆகியோரின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி, மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்