Rock Fort Times
Online News

த.வெ.க.வில் இணையும் திருச்சி அதிமுக பிரமுகர்..?

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளரும், தற்போது நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அரசியல் பிரமுகர் ஒருவர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வராக உள்ள விஜயை நேரில் சந்தித்து த.வெ.க.வில் இணைவது என்பது தற்போது இயலாத காரியம் என்பதால் அந்தக் கட்சியில் உள்ள சீனியர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் இணைந்து விசில் அடிக்க தயாராகி வருகிறாராம் அவர். தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் பிளவுபட்டு இருக்கும் இந்த சூழலில் ஏற்கனவே ‘மூன்றெழுத்து’ இன்சியல் கொண்ட பிரமுகர் நடத்தி வரும் கட்சியில் அங்கம் வகித்த இந்த அரசியல் பிரமுகர் தற்போது த.வெ.க.வில் இணைவது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று தமிழக புலனாய்வு அதிகாரிகள் நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள். முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ள திருச்சி கிழக்கு தொகுதி தற்போது காலியாக உள்ளது. இந்த தொகுதியில் ஏற்கனவே தான் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்த அனுபவத்தை கொண்டு மீண்டும் இத்தொகுதியில் களம் காண காய் நகர்த்தி வருகிறாராம் இந்தப் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்