திருச்சி பீமநகர் கூனிபஜார் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 30). இவர் முதலியார் சத்திரம் டீக்கடை அருகில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது கடைக்கு வந்த 3 ஆசாமிகள் மாசிலாமணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1200 பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். இதுகுறித்து பாலக்கரை போலீசில் மாசிலாமணி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சுற்றி திரிந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் கீழ சேகரகுடியை சேர்ந்த ஓம் முருகன் (23), நாகை மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீசன் (24), மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சண்முகராஜா ( 35) என்பதும்,
இவர்கள் 3 பேரும் மாசிலாமணியிடம் கக்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில், ஓம்முருகன் மீது புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.