திருச்சி சிந்தாமணி புது தெருவை சேர்ந்தவர் விஜயன் (33). இவர் திருச்சி மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் திடீரென விஜயன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.