காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கன அடி நீரானது வந்து கொண்டிருக்கிறது. இதில், காவிரியில் 31 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடத்தில் 68 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் உடையாமல் இருப்பதற்காக பாலத்தின் அருகே பக்கவாட்டு பகுதியில் 6.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு இருந்தது. கொள்ளிடம் ஆற்றில் 68 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் தடுப்பணையின் ஒரு பகுதியில் சுமார் 200 மீட்டர் வரை உடைந்துள்ளது. நேப்பியர் பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக அதனை பாதுகாக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தடுப்பணை கட்டப்பட்டது.
அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் பலர் குளித்து வந்தனர். இதுவரை அங்கு குளித்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அந்த தடுப்பணை திடீரென உடைந்தது. மேலும், கொள்ளிடம் பாலத்தின் அருகில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் கான்கிரீட் தூண்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் யாரும் செல்லாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் பாலம் உடைந்து புதிதாக கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1
of 938
Comments are closed.