Rock Fort Times
Online News

திருச்சியில் அரசு பேருந்து- ஆட்டோ பயங்கர மோதல்: ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்…!

திருச்சி தில்லைநகர் வடவூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்குராஜ் (26). ஆட்டோ ஓட்டுநரான இவர் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான மாரி (32), பிரசாந்த் (27), பாலமுருகன் (30), மகேஷ் (35) ஆகிய  4 பேரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள ஒரு கோயில் விழாவுக்காக சென்று இருந்தார். அங்கிருந்து நேற்று இரவு திருச்சிக்கு வந்து கொண்டிருந்தனர். கம்பரசம்பேட்டை அருகே முருங்கப்பேட்டை காளியம்மன் கோயில் பகுதியில் வந்தபோது திருச்சியிலிருந்து ஈரோடு நோக்கி சென்ற அரசு பேருந்தும், ஆட்டோவும் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதிக்கொண்டன.  இதில் அந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து சில மீட்டர் தூரம் இழுத்துசெல்லப்பட்டது. உடனே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில், ஆட்டோ ஓட்டுநர் அங்குராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
மற்ற 4 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக  அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இந்த பகுதியில் சாலை குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த அங்குராஜ்க்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்